பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
ADDED : செப் 04, 2011 12:59 PM
புதுடில்லி: உத்தரகண்டில் ஆற்றில் பஸ் முழ்கிய விபத்தில் 15 பேர் பலியாயினர்.
உத்தர்க்காண்டின் டேராடூன் பகுதியிலிருந்து டில்லி நோக்கி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தியானி மார்க்கெட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டோன்ஸ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் பலியானதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.


