/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிடைத்தது "சுத்த' விருது: இது வரை கிடைக்காதது சுகாதாரம்கிடைத்தது "சுத்த' விருது: இது வரை கிடைக்காதது சுகாதாரம்
கிடைத்தது "சுத்த' விருது: இது வரை கிடைக்காதது சுகாதாரம்
கிடைத்தது "சுத்த' விருது: இது வரை கிடைக்காதது சுகாதாரம்
கிடைத்தது "சுத்த' விருது: இது வரை கிடைக்காதது சுகாதாரம்
ADDED : செப் 06, 2011 10:26 PM
கொடைக்கானல் கீழ்மலை காமனூர் ஊராட்சியில், மங்களம்கொம்பு, கொடலங்காடு, கானல்காடு, தீனிக்கோடு, இந்திராநகர், எம்.ஜி.ஆர்., நகர், மங்களபுரம் பகுதிகள் அடங்கும்.
ஊராட்சியின் மையமாக தடியன்குடிசை நறுமணப் பொருள் சுற்றுலா மைய தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. பிரச்னைகள்: விவசாயமே பிரதான தொழில். காபி, ஆரஞ்சு, மிளகு, ஏலக்காய், வாழை உள்ளிட்டவை, மழையை நம்பி பயிர் செய்யப்படுகின்றன. நிரந்தர நீர்தேக்கமின்றி, கிணறுகள் மூலம் குறுவிவசாயம் செய்யப்படுகிறது. தெருக்களில் சிதறி கிடக்கும் குப்பை, அகற்றப்படாத சாக்கடை கழிவு, திறந்த வெளியில் மனித கழிவு என, அவலங்கள் ஏராளம். இந்த ஊராட்சி சுத்தம், சுகாதாரத்தை நூறு சதவீதம் பராமரித்ததாக கூறி, மத்திய அரசின் 'நிர்மல் புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. ஆனால், மேற்கூறிய அவலங்களுக்கும், விருதுக்கும் முடிச்சு போட்டால், நமக்கு குழப்பம் தான் விஞ்சும். கிராமத்தினர் கூறுவது என்ன?மோகன், காமனூர்: சாக்கடை வசதி இன்றி கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. கொசுக்கள் அதிகரித்துள்ளன. மங்களபுரம்- கொடலங்காடு இடையே 7.கி.மீ., ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயகற்று உள்ளது. கழிப்பறை மேற்கூரை சேதமடைந்தும், தண்ணீர் வசதி இன்றியும் பயனற்றுள்ளது. துவக்கப் பள்ளி அருகே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில், பள்ளத்தில் மண் போடாமல் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.வேலுச்சாமி, ஆசிரியர்: மங்களம்கொம்பில் கழிப்பறை இருந்தும் பராமரிப்பு இல்லை. ரோடு ஓரத்தில் அசுத்தம் செய்கின்றனர். முழு சுகாதாரத்திற்காக விருது பெற்ற நிலையில், தற்போது சம்மந்தமில்லாத நிலை உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் பயனற்று உள்ளன. நூலக பகுதி டாஸ்மாக் 'பார்' ஆக செயல்படுகிறது. கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், கிணறுகளையே நம்பும் நிலை. செயல்படாத துணை சுகாதார நிலையம், தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாத நிலை போன்றவற்றால் சிகிச்சை குதிரை கொம்பாக உள்ளது.பொன் ரமேஷ்: கானல்காடு, கொடலங்காடு பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. கானல்காடு சமுதாய கூடம் கழுதைகள் கூடாரமாக உள்ளது. எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட குளம், நீர் தேக்க முடியாமல் புதர்மண்டி உள் ளது. ஊராட்சி பகுதி முழுமையும் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இந்திராநகர், தீனிக்கோடு பகுதியில் குடிநீர் எட்டாக்கனி. காமனுர்- கொடலங்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் விட வேண்டும். மங்களம்கொம்பு குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். ஊராட்சியை வளப்படுத்த தலைவர் தவறிவிட்டார்.


