/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பார்த்தீனியம் செடி அழிப்பு சித்தாத்தூரில் சிறப்பு முகாம்பார்த்தீனியம் செடி அழிப்பு சித்தாத்தூரில் சிறப்பு முகாம்
பார்த்தீனியம் செடி அழிப்பு சித்தாத்தூரில் சிறப்பு முகாம்
பார்த்தீனியம் செடி அழிப்பு சித்தாத்தூரில் சிறப்பு முகாம்
பார்த்தீனியம் செடி அழிப்பு சித்தாத்தூரில் சிறப்பு முகாம்
ADDED : செப் 06, 2011 10:28 PM
திருக்கோவிலூர் ; வேளாண் துறை சார்பில் முகையூர் ஒன்றியம் சித்தாத்தூர் கிராமத்தில் பார்த்தீனியம் செடி அழிப்பு சிறப்பு முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன் வரவேற்றார். இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். விவசாயிகள் முன்னிலையில் ரசாயனம் கொண்டு பார்த்தீனியம் செடி அழிக்கும் முறை பற்றி நேர்முக பயிற்சி அளிக்கப் பட்டது. இணை இயக்குனர் ராஜேந்திரன் பேசும்போது, பார்த்தீனியம் செடி யில் பார்த்திஜீன் என்ற நச்சு உள்ளது. இது கால்நடைகள், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மனிதர்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண் நோய் மற்றும் தோல் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார். இதனை கட்டுப்படுத்த பயிர் சாகுபடியுடன் துளுக் கச் சாமந்தி பயிர் செய்வது, பயிர் இல்லாத தருணத்தில் களைக் கொல்லியை பயன்படுத்தி அழிப் பது குறித்து வேளாண் துறை அலுவலர்கள் விளக்கமளித்தனர். குமார் நன்றி கூறினார்.


