/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/டாஸ்மாக் கடையை இடம் மாற்ற மக்கள் கோரிக்கைடாஸ்மாக் கடையை இடம் மாற்ற மக்கள் கோரிக்கை
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற மக்கள் கோரிக்கை
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற மக்கள் கோரிக்கை
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற மக்கள் கோரிக்கை
ADDED : செப் 07, 2011 02:45 AM
அரூர்: மொரப்பூரில் கல்லாவி பிரிவு ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை,
வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொரப்பூர், கல்லாவி ரோடில் உள்ள டாஸ்மாக்கில் பார் வசதி இல்லை. இதனால்
இங்கு, மது அருந்த வரும் குடிமகன்கள் திறந்த வெளியிலேயே, மது
குடிக்கின்றனர். போதை ஏறியவுடன் அங்கேயே பொதுமக்கள் அதிகம் வசிக்கும்
பகுதிலேயே விழுந்து விடுகின்றனர். இந்த வழியே செல்லும் பெண்கள் மற்றும்
மாணவிகளை போதை குடிமகன்கள் சிலர் கிண்டல் செய்கின்றனர். மேலும்,
போக்குவரத்திற்கு இடையூறாக குறுக்கே படுத்து விடுகின்றனர். அதனால்,
பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். அருகில், மொரப்பூர் போலீஸ்
ஸ்டேஷன் உள்ளது. இதனை போலீஸாரும் கண்டு கொள்வதில்லை என, பொதுமக்கள்
குற்றம்சாட்டுகின்றனர். வேறு பகுதிக்கு இக்கடையை மாற்ற வேண்டும் என,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


