/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி வார்டுகள் பிரிவு ஒதுக்கீட்டில் குழப்பம் நீடிப்புமாநகராட்சி வார்டுகள் பிரிவு ஒதுக்கீட்டில் குழப்பம் நீடிப்பு
மாநகராட்சி வார்டுகள் பிரிவு ஒதுக்கீட்டில் குழப்பம் நீடிப்பு
மாநகராட்சி வார்டுகள் பிரிவு ஒதுக்கீட்டில் குழப்பம் நீடிப்பு
மாநகராட்சி வார்டுகள் பிரிவு ஒதுக்கீட்டில் குழப்பம் நீடிப்பு
ADDED : செப் 07, 2011 02:46 AM
மதுரை : மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வார்டுகள் பிரிப்பதில், எஸ்.சி., வார்டுக்கான ஒதுக்கீட்டில் குழப்பம் நீடிப்பதால், புது வார்டு பட்டியல் வெளியாவதில் தாமதமாகிறது.100 வார்டுகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், எஸ்.சி., பெண் வேட்பாளர்களுக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டு, பெண்களுக்கான மொத்த ஒதுக்கீடு 35 சதவீதமாக உயர்ந்தது, நேற்று தெரியவந்தது. இதனால், வார்டுகளை மீண்டும் திருத்தி அமைக்கும் பணி இரவு 9 மணி வரை நடந்தது. இப்பணியில் முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இன்று வார்டுகளின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் அரசு தரப்பில் வார்டுகளின் பட்டியல் வெளியிடப்படவில்லை, என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


