/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க.,செயலாளரின் ஜாமின் மனு டிஸ்மிஸ்தி.மு.க.,செயலாளரின் ஜாமின் மனு டிஸ்மிஸ்
தி.மு.க.,செயலாளரின் ஜாமின் மனு டிஸ்மிஸ்
தி.மு.க.,செயலாளரின் ஜாமின் மனு டிஸ்மிஸ்
தி.மு.க.,செயலாளரின் ஜாமின் மனு டிஸ்மிஸ்
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : நில அபகரிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட, மாநகர தி.மு.க., செயலாளர் வீரகோபாலின் ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் ரத்தினம். விளாங்குறிச்சியில் இவருக்கு சொந்தமாக 2.6 ஏக்கர் நிலம் உள்ளது.போலி ஆவணம் தயாரித்து, இந்நிலத்தை கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.,செயலாளர் வீரகோபால் மற்றும் இருவர் அபகரித்து விட்டதாக புகார் எழுந்தது. கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து ஆகஸ்ட் 25ல் வீரகோபால் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இவர் சார்பில் ஜாமின் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் மனுவை விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


