ADDED : அக் 07, 2011 12:21 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கோவர்த்தனாம்பிகை, துர்க்கை அம்மன், செப்.29 முதல் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நவராத்திரி உச்ச நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமி, தங்க குதிரை வாகனத்தில், பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்குள்ள வன்னி மரத்திற்கு பூஜைகள் முடிந்து, சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.


