ADDED : அக் 08, 2011 01:36 AM
இடைப்பாடி: இடைப்பாடியில், வயிற்று வலி காரணமாக, நகராட்சி துப்புரவு
தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இடைப்பாடி போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இடைப்பாடி அருகே உள்ள
சின்னமணலி, ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி மேகலா(34).
இடைப்பாடி நகராட்சியில், துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்தார். இவருக்கு,
கடந்த 15 ஆண்டுகளாக வயிற்றுவலி இருந்து வந்தது.
பல இடங்களில் சிகிச்சை பார்த்தும், வலி குறையாததால், நேற்று தூக்க
மாத்திரை, சாணி பவுடர் கலந்து குடித்துள்ளார். ஆபத்தான நிலையில், சேலம்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேகலா இறந்தார்.


