எம்.அருண் வடபுதுப்பட்டி:எங்கள் ஊரில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது.
தினமும் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.ரோடு, சாக்கடை வசதிகளை சீரமைத்து தர வேண்டும். தெருவிளக்குகளை நல்ல முறையில் அமைத்து தர வேண்டும். லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் தர வேண்டும். இப்படிப்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளிக்க முடிவு செய்துள்ளேன்.


