ADDED : ஆக 22, 2011 12:49 AM
நடுவீரப்பட்டு : முன் விரோதம் காரணமாக மூதாட்டியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இருவரும் உறவினர்கள். இருவருக்கும் நிலம் சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரம், கோபால் வீட்டினுள் புகுந்து அவரை ஆபாசமாகத் திட்டி அவரது மனைவி தனத்தை, 60 தாக்கினார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.


