ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமின் : தினமும் ஆஜராக உத்தரவு
ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமின் : தினமும் ஆஜராக உத்தரவு
ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமின் : தினமும் ஆஜராக உத்தரவு
ADDED : ஜூலை 27, 2011 06:56 PM
சேலம்: சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் , சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி, நிபந்தனை ஜாமின் பெற்றார்.
சேலம், அங்கம்மாள் காலனி பிரச்னை மற்றும் ப்ரீமியர் ரோலர் மில் விவகாரத்தில்,முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஐகோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்தார். இம்மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜூலை 25ம் தேதி முதல், ஜூலை 27ம் தேதி வரை போலீஸ் காவலுக்கு சரண் அடையவும், காவல் முடிந்ததும், ஜே.எம்., எண் 5ல் ஆஜராகி, நிபந்தனை ஜாமின் பெறவும் உத்தரவிடப்பட்டது. இதன்படி நேற்று, போலீஸ் காவல் முடிந்து, மாலை 4.45 மணிக்கு சேலம் மாஜிஸ்திரேட் முன் ஆஜரானார். ப்ரீமியர் ரோலர் மில் வழக்குக்கும்,இந்த கோர்ட்டிலேயே ஆஜராகி ஜாமின் பெற, ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சொந்த ஜாமின் உட்பட, ப்ரீமியர் ரோலர் மில் வழக்கில், உறவினர்கள் தங்கவேல், பழனிசாமி ஆகியோரும், அங்கம்மாள் காலனி வழக்கில் உமாசங்கர், சவுந்திரராஜன் ஆகியோரும், முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் வழங்கினர். நீதிபதி சரத்ராஜ் முன்னாள் அமைச்சருக்கு, 'மறு உத்தரவு வரும் வரை தினமும், மாநகர மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனையுடன், ஜாமின் வழங்கினார்.