/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிதொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிதொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிதொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிதொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிதொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஆக 22, 2011 02:39 AM
திருநெல்வேலி:கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மாநாடு பாளை., யில் நடந்தது.
மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாட்டு வண்டி சங்க அமைப்பாளர்கள்
நல்லக்கண்ணு, கோவிந்தன், நல்லதுரை, முருகன் முனுனிலை வகித்தனர். மாநில
செயலாளர் ரத்தினம் வரவேற்றார். மாநாட்டை கேசவன் துவக்கிவைத்தார்.மாநில
பொதுச் செயலாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சின்னத்துரை, பால்பாண்டியன்,
சிறப்பு அழைப்பாளர்கள் கண்ணன், மூக்கையா, கல்லத்தியான், சுடலைமுத்து,
தென்கரை மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வரும் உள்ளாட்சி தேர்தலில்
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற தொழிலாளர்கள் அமைப்பு முழு ஆதரவை
தெரிவிக்கப்பட்டது. குறைந்த அளவிலான கட்டுமான பணிகளை மேற்கொள்ள புதிய மணல்
குவாரிகளை ஏற்படுத்தி மாட்டு வண்டிகளில் மணல் அள்ள விதிமுறைகளை
தளர்த்தவேண்டும்.
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த
தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை 60லிருந்து 55 ஆக குறைக்கவேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.2
ஆயிரம் வழங்கவேண்டும். நலவாரியம் மூலம் வழங்கும் இயற்கை மரண உதவித் தொகையை
ரூ.15 ஆயிரத்திலிருந்து, ரூ.50 ஆயிரம் ஆகவும், விபத்து உதவித் தொகை ரூ.1
லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் வழங்கவேண்டும். கட்டுமான தொழிலாளர்கள்
நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு தொழிலாளர்களின் உண்மை தன்மைக்கான தொழில்
சான்று கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கும் முறையை ரத்துசெய்ய அரசை
கேட்டுக் கொள்வது, கட்டட தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து
ஓராண்டிற்கு பின் நலத்திட்ட உதவிகள் பெறவேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தி
பதிவு செய்த நாள் முதல் நலத்திட்ட உதவிகளை வழங்க அரசை கேட்டுக் கொள்வது,
தமிழக அரசின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர்கள்
கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் மேற்படி திட்டத்தின் கீழ் வீடுகள்
வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில்
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சிறந்த முறையில் சீரமைக்கப்படும் என
அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.தலைமை நிலைய
செயலாளர் பேச்சியப்பன் நன்றி கூறினார்.