பா.ஜ., நிதின் கட்காரியின் அறிவிப்பு : வெளிநாட்டு இந்தியர்கள் வரவேற்பு
பா.ஜ., நிதின் கட்காரியின் அறிவிப்பு : வெளிநாட்டு இந்தியர்கள் வரவேற்பு
பா.ஜ., நிதின் கட்காரியின் அறிவிப்பு : வெளிநாட்டு இந்தியர்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 24, 2011 09:49 PM

லண்டன் : பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ள இரட்டைக் குடியுரிமை ஆலோசனைக்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய சட்டப்படி, வெளிநாடு ஒன்றில் குடியுரிமை பெறும் இந்தியர், தன் இந்தியக் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதே நேரம், வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த அந்தஸ்துக்கு, இந்தியக் குடிமகன் என்பதற்குரிய பல உரிமைகள் வழங்கப்பட மாட்டாது.
பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி சமீபத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குச் சுற்றுப் பயணம் சென்றார். அங்கு பேசிய அவர்,'வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்கு பா.ஜ., ஆதரவளிக்கும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதுகுறித்து முன்பே உறுதியளித்துள்ளார்' என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து லண்டனில் இயங்கி வரும், புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் அமித் கபாடியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,'நிதின் கட்காரியின் இந்த அறிக்கையை வரவேற்கிறோம். இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.