சாய ஆலை பிரச்னையை தீர்க்க கமிட்டி நியமனம்
சாய ஆலை பிரச்னையை தீர்க்க கமிட்டி நியமனம்
சாய ஆலை பிரச்னையை தீர்க்க கமிட்டி நியமனம்
ADDED : ஜூலை 19, 2011 11:41 AM
புதுடில்லி: திருப்பூரில் மூடப்பட்ட சாய ஆலைகளை மீண்டும் திறப்பதற்கான தீர்வுகளை கண்டறிய, தமிழக அரசின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை, மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்த கமிட்டியின் தலைவராக, மத்திய ஜவுளித் துறை செயலர் ரீடா மேனன் இருப்பார். கமிட்டியின் உறுப்பினர்களாக, தமிழக தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சாய ஆலைகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவர். இந்நிலையில், சென்னை வந்த ரீடா மேனன், தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சாய ஆலைகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


