/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபரங்களுடன் விதைகள் விற்க அறிவுறுத்தல்விபரங்களுடன் விதைகள் விற்க அறிவுறுத்தல்
விபரங்களுடன் விதைகள் விற்க அறிவுறுத்தல்
விபரங்களுடன் விதைகள் விற்க அறிவுறுத்தல்
விபரங்களுடன் விதைகள் விற்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 09, 2011 02:48 AM
கோவை : விதை விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் உரிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.
தவறும்பட்சத்தில், விதை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த இரண்டு வாரங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஆவணி பட்ட விதைப்பு பணிக்காக, விளை நிலத்தை பக்குவப்படுத்தும் பணியில், விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை, விதை உற்பத்தி, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.கோவை, விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமிநடேசன் வெளியிட்டுள்ள செய்தி:விற்பனை செய்யும் அனைத்து விதை கொள்கலனில் உள்ள விபர அட்டை, ஓபல் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். விபர பட்டியலில் அனைத்து விபரங்களும் தெளிவாக குறிப்பிட வேண்டும். விபர அட்டை எண், பயிர், ரகம், குவியல் எண், பரிசோதனை நாள், காலக்கெடு நாள், இனத்தூய்மை, முளைப்புத்திறன், புறத்தூய்மை, நிகர எடை, உற்பத்தியாளர் பெயர், முகவரி, நஞ்சு கலக்கப்பட்டிருந்தால் நஞ்சின் பெயர், பயிரிடப்பட உகந்த இடங்கள், பருவம் ஆகியன விபர பட்டியலில் அடங்கி இருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள விபரங்களில் எந்த ஒரு மாற்றமோ அல்லது விபரம் விடுபட்டிருந்தால், விதைச் சட்டம், விதை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் விதை உற்பத்தி வினியோகம், விற்பனை செய்யும் அனைத்து நபர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


