பாக்., அதிபர், பிரதமருக்கு கோர்ட் நோட்டீஸ்
பாக்., அதிபர், பிரதமருக்கு கோர்ட் நோட்டீஸ்
பாக்., அதிபர், பிரதமருக்கு கோர்ட் நோட்டீஸ்
ADDED : அக் 12, 2011 12:08 PM
லாகூர்: வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், மற்றும் இம்ரான் கான் உள்ளிட்ட முக்கிய அரசியல்கட்சி தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப லாகூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நோட்டீசை அனுப்பிய லாகூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி இஜாஸ் அகமது சவுத்ரி, அனைவரும் தங்களது சொத்துக்கணக்குகள் குறித்த விளக்கங்களுடன் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தனது உத்தரவில் கூறியுள்ளார். இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் முதல் வாரம் நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.


