/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலை அகலப்படுத்தும் பணி: மின்சாரம் நிறுத்தம்சாலை அகலப்படுத்தும் பணி: மின்சாரம் நிறுத்தம்
சாலை அகலப்படுத்தும் பணி: மின்சாரம் நிறுத்தம்
சாலை அகலப்படுத்தும் பணி: மின்சாரம் நிறுத்தம்
சாலை அகலப்படுத்தும் பணி: மின்சாரம் நிறுத்தம்
ADDED : ஜூலை 17, 2011 02:27 AM
தர்மபுரி: தர்மபுரியில் சாலை அகலப்படுத்தும் பணி காரணமாக குறிபிட்ட இடங்களில் மின் விநியோகம் நாளை (ஜூலை 18) முதல் 22ம் தேதி வரையில் நிறுத்தம் செய்யப்படுகிறது.மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடப்பதால், உயர் மின் அழுத்த மற்றும் தாழ்மின் அழுத்த மின் கம்பங்கள் சாலையோரம் மாற்றும் விஸ்தரிப்பு பணிக்கள் நடக்கிறது.
எனவே நாளை முதல் வரும் 22ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நெடுமாறன் நகர், சின்னதாயம்மாள் தெரு, சூடாமணி தெரு, வைண்டிங் டிரைவர் சின்னசாமி தெரு, வடிவேல் தெரு, அம்பேத்கர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் நேதாஜி பைபாஸ் ரோடு (ஸ்டேட் வங்கி முதல் அரசு மருத்துவமனை வரை) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.