/உள்ளூர் செய்திகள்/சென்னை/விதிமீறல் கட்டடங்கள் குறித்து "கப் - சிப்':விவாதிக்காமல் முடிந்தது சி.எம்.டி.ஏ., கூட்டம்விதிமீறல் கட்டடங்கள் குறித்து "கப் - சிப்':விவாதிக்காமல் முடிந்தது சி.எம்.டி.ஏ., கூட்டம்
விதிமீறல் கட்டடங்கள் குறித்து "கப் - சிப்':விவாதிக்காமல் முடிந்தது சி.எம்.டி.ஏ., கூட்டம்
விதிமீறல் கட்டடங்கள் குறித்து "கப் - சிப்':விவாதிக்காமல் முடிந்தது சி.எம்.டி.ஏ., கூட்டம்
விதிமீறல் கட்டடங்கள் குறித்து "கப் - சிப்':விவாதிக்காமல் முடிந்தது சி.எம்.டி.ஏ., கூட்டம்
ADDED : ஜூலை 13, 2011 05:01 AM
சென்னை:சென்னையில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பது தொடர்பான விவாதங்கள் ஏதுமின்றி, அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணிக்காலம் நீட்டிப்பு உள்ளிட்ட நிர்வாக ரீதியான விஷயங்களை மட்டும் ஆலோசித்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.,) கூட்டம் முடிவடைந்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின், சி.எம்.டி.ஏ.,வின் முதல் கூட்டம், அதன் தலைவரும் வீட்டுவசதித்துறை அமைச்சருமான வைத்திலிங்கம் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், விதிமீறல் கட்டடங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.'கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த, அதிகாரிகளின் பதவி உயர்வு, பணிக்கால நீட்டிப்பு உள்ளிட்ட நிர்வாக ரீதியான பொருள்கள் குறித்து மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட்டன' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 33 ஆயிரம் கட்டடங்கள் மீது, இடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க கண்காணிப்புக் குழு அமைத்து, சென்னை ஐகோர்ட் 2006ம் ஆண்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு 2007ல் கொண்டு வந்த சட்டத்தையும் ஆரம்ப நிலையிலேயே சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
இதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும்' என்ற உத்தரவை ரத்து செய்தது. இதன் மூலம், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்வதில், கண்காணிப்புக்குழுவுக்கு இருந்துவந்த தடை நீங்கியுள்ளது. கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகளை முடக்கும் சட்டம், இம்மாதம் 26ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதை மீண்டும் நீட்டிக்க முடியாது என்பதால், விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் என்ன செய்வது என, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


