Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சாய ஆலைகளை உடனே திறக்கக்கோரி தொழில் பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்

சாய ஆலைகளை உடனே திறக்கக்கோரி தொழில் பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்

சாய ஆலைகளை உடனே திறக்கக்கோரி தொழில் பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்

சாய ஆலைகளை உடனே திறக்கக்கோரி தொழில் பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரம் தொழிலாளர்கள் திரண்

UPDATED : ஜூலை 28, 2011 04:10 AMADDED : ஜூலை 27, 2011 09:37 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் : திருப்பூரில் மூடப்பட்டுள்ள சாய, சலவை ஆலைகளை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொழில் பாதுகாப்புக் குழு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூரில் உள்ள, 734 சாய, சலவை ஆலைகள், 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள், 146 தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள், ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால், பனியன் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் பனியன் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சாய, சலவை ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில பொதுச் செயலர் சுப்பிரமணியம், தொழில் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் ராமசாமி, பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் வரவேற்றார். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையில், தொழில் பாதுகாப்பு, சாயப்பிரச்னைக்குத் தீர்வு, தொழிலாளர் நலன் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார் பேசியதாவது: பனியன் தொழில் மூலமாக, மத்திய, மாநில அரசுகள் கணிசமான வரி வருவாய் பெறுகின்றன. அரசு, நமக்கு உதவவில்லை. முதலாளியும், தொழிலாளியும் சேர்ந்து, பனியன் தொழிலுக்காக இன்று ஒற்றுமையுடன் இங்கு கூடியுள்ளோம். கோர்ட் உத்தரவுக்குத் தலை வணங்குகிறோம்.

ஆனால், மாசுபடுவதைக் கட்டுப்படுத்த மறந்து விட்டு, இன்று தொழிலை கட்டுப்படுத்துவது போன்ற சில அதிகாரிகளின் நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மீண்டும் திருப்பூர் மண்ணில் போராட்டம் நடக்காத வகையில், சாய ஆலைகளைத் திறந்து, தொழில்முனைவோரையும், தொழிலாளர்களையும், பொது மக்களையும் பாதுகாக்க வேண்டும், என்றார்.

திருப்பூர் கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம், சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம், மாநகராட்சி கடை வியாபாரிகள் உரிமையாளர்கள் சங்கம், மின்சாதன பொருட்கள் விற்பனையாளர் சங்கம், உழவர் சந்தை காய்கறி வியாபாரிகள், தையல் கலைஞர்கள் சங்கம், காஜா பட்டன் உரிமையாளர் சங்கம், சிறு பனியன் உற்பத்தியாளர் சங்கம், கேபிள் 'டிவி' ஆபரேட்டர் சங்கம், காதர்பேட்டை பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், போராட்டத்தை விளக்கி பேசினர்.

மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, எம்.ஜி.ஆர்., சிலை வரையில் உள்ள வளர்மதி ரோட்டில் தொழிலாளர்கள் திரளாக நின்றிருந்தனர்; பெண்கள் அமர்ந்திருந்தனர். திருப்பூர் பகுதி வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 3,000 பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கடையடைப்பு தேதி மாற்றம் : திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை பேசுகையில்,''அடுத்தகட்டமாக, 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆடிப்பெருக்கு விழா 3ம் தேதி நடப்பதால், பொதுமக்கள் கடைகளுக்கு சென்றுவர வேண்டியிருக்கும். எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், 4 மற்றும் 5ம் தேதிகளில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தபோராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலை பாதுகாக்க யார் போராட்டம் நடத்தினாலும், தொழில் பாதுகாப்பு குழு முழு ஆதரவு அளிக்கும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us