ADDED : ஆக 28, 2011 09:48 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே உள்ள பாலூரில் அருள்மிகு பதங்கீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள், கோயிலின் கருவறையில் இருந்த 9 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை கோயிலின் பூட்டி உடைக்கப்பட்டிருப்பது கண்டு கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


