/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/"இரும்பு சத்துள்ள உணவு மூலம் ரத்தம் சேரும்'"இரும்பு சத்துள்ள உணவு மூலம் ரத்தம் சேரும்'
"இரும்பு சத்துள்ள உணவு மூலம் ரத்தம் சேரும்'
"இரும்பு சத்துள்ள உணவு மூலம் ரத்தம் சேரும்'
"இரும்பு சத்துள்ள உணவு மூலம் ரத்தம் சேரும்'
ADDED : செப் 02, 2011 11:23 PM
குன்னூர் : 'இரும்பு சத்துள்ள உணவு வகைகளை அதிகம் சேர்த்து கொண்டால், உடலில் அதிகளவு ரத்தம் சுரக்கும்,' என தெரிவிக்கப்பட்டது.
அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், ரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மாணவர்களுக்கான ரத்த வகை கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கார்டைட் மருத்துவமனை குடும்பநல ஆலோசகர் உதயகுமார் பேசுகையில், ''18 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் நலம், 50 கிலோ எடையுடன் இருந்தால் ரத்த தானம் செய்யலாம்.
ரத்தம் மூலம் பரவும் டைபாய்டு, மஞ்சள் காமாலை, மலேரியா, மஞ்சள் காமாலை -பி, மற்றும் எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்ய கூடாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்வது நல்லது,'' என்றார். 50க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு ரத்த பரிசோதகர் நிஜில், ரத்தப்பிரிவு கண்டறியும் பரிசோதனையை நடத்தினார். ஆசிரியர்கள் பிரகாஷ், ஜெயபிரகாஷ், ஆசிரியை ராஜ ஹெப்சி பங்கேற்றனர். ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.


