Xவெள்ளகோவில்: நாகை மாவட்டம் வடகரை வடக்குமாந்தோட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் மகேஷ் (35).
இவர், நேற்று முன்தினம் காலை 7 மணியளவில், வெள்ளகோவில் - கோவை ரோட்டில், 'சாரதா வனஸ்பதி' மில் அருகில், 'பொலிரோ' ஜீப்பில் சென்றார். ரோட்டோரம் நின்று கொண்டிருந்த, 'ஈச்சர்' வேன் மீது, 'பொலிரோ' ஜீப் மோதியது. உடனே, ஜீப்பை பின்னால் எடுத்தார் மகேஷ். அப்போது ரோட்டில் சென்ற அரசு பஸ் மீது மோதியதில், மகேஷ் படுகாயமடைந்தார். காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஷ், நேற்று காலை 8.20 மணியளவில் இறந்தார்.


