கசாப் பிறந்த நாளன்று சம்பவம்: பாக். மீது சந்தேகம்
கசாப் பிறந்த நாளன்று சம்பவம்: பாக். மீது சந்தேகம்
கசாப் பிறந்த நாளன்று சம்பவம்: பாக். மீது சந்தேகம்
ADDED : ஜூலை 14, 2011 02:05 AM
மும்பை: கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்கு தலில் தொடர்புடைய பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் 25-வது பிறந்த நாள் நேற்று (ஜூலை 13, 1987) என்பதால் சூழலில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியான ஜாவேரி, தாதர், சார்னி ஆகிய மூன்று இடங்களில் அடுத்தடுத்து நடந்த மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் 21 பேர் பலியாயினர். சம்பவ இடத்தில் பயங்கரவாத தடுப்புபடையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த கொடிய சம்பவத்திற்கும், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26 -ம் தேதி மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகள் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். பின்னர் அவன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு கோர்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. பின்னர் அவனுக்கு மும்பை கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது 25-வது பிறந்த நாள் நேற்று என்பதால் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் ஆதரவாளர்களே சதி இச்சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.


