/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கசந்தது கரும்பு: சாகுபடி கவலையில் விவசாயிகள்கசந்தது கரும்பு: சாகுபடி கவலையில் விவசாயிகள்
கசந்தது கரும்பு: சாகுபடி கவலையில் விவசாயிகள்
கசந்தது கரும்பு: சாகுபடி கவலையில் விவசாயிகள்
கசந்தது கரும்பு: சாகுபடி கவலையில் விவசாயிகள்
ADDED : ஜூலை 13, 2011 10:07 PM
முதுகுளத்தூர் : மழை பொய்த்ததால் முதுகுளத்தூர் அருகே கள்ளிக்குளத்தில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு விவசாயம் அழிந்து வருகிறது.
கரும்பு விவசாயிகள் கவலையில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் ஆற்று பாசன வசதிகள் இல்லை. மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வப்போது பெய்துவரும் மழையை நம்பியும், ஆங்காங்கே குளம், குட்டைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை பயன்பாடுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். சில பகுதிகளில் ஒரு போகம் நெல் விவசாயம் மட்டுமே செய்யப்படுகிறது.
மற்ற காலங்களில் பிழைப்பு தேடி திருப்பூர், கோவை, சென்னை உட்பட பல பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். முதுகுளத்தூர் அருகே கள்ளிக்குளத்தில் சமீபத்தில் பெய்த மழையை நம்பி 20 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாததால் கரும்பு வளர்ச்சியடைவில்லை. தண்ணீரின்றி கருகி, அழிந்து வருகிறது. விவசாயிகள் செய்வதறியாது கவலையில் உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: நெல், மிளகாய் பயிர்கள் பாதிக்கக்பட்டால், உரிய இழப்பீட்டு தொகை வழங்குவதுபோல், கரும்புக்கும் வழங்க வேண்டும். கருவேல மரங்கள் படர்ந்து கிடக்கும், இப்பகுதியில் விவசாயத்தை காக்க ஆழ்குழாய் கிணறு அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கினால் விவசாயம் தலைத்தோங்கும்.


