Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை

தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை

தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை

தொளார் நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 13, 2011 11:46 PM


Google News

திட்டக்குடி: தொளார் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி அடுத்த தொளார் பகுதியில் தற்போது சம்பா நெல் அறுவடை நடந்து வருகிறது.

இதனையடுத்து இரு மாதங்களாக தொளாரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, தொளார், மேலூர், மருவத்தூர், கொத்தட்டை, இறையூர், செங்கமேடு, குடிகாடு, கொட்டாரம் உட்பட பல கிராம விவசாயிகள் தங்கள் நெல்லை விற்று பயனடைந்து வந்தனர். இதுவரை 27 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் 15ம் தேதியுடன் நெல் கொள்முதல் நிலையம் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆயிரம் மூட்டைக்கு மேல் நெல் வரத்து உள்ளதால், அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கால நீடிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us