Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/10 மணி நேரம் தொடர் மின்தடை புழுக்கத்தில் தவித்தது முதுகுளத்தூர்

10 மணி நேரம் தொடர் மின்தடை புழுக்கத்தில் தவித்தது முதுகுளத்தூர்

10 மணி நேரம் தொடர் மின்தடை புழுக்கத்தில் தவித்தது முதுகுளத்தூர்

10 மணி நேரம் தொடர் மின்தடை புழுக்கத்தில் தவித்தது முதுகுளத்தூர்

ADDED : ஜூலை 13, 2011 02:31 AM


Google News
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியிலிருந்து இரவு 11.30 வரை தொடர்ந்து மின்தடை ஏற்படுத்தப்பட்டது.கிராம, ஊரக பகுதிகளில் நாள்தோறும் மூன்றிலிருந்து இரண்டு மணி நேரமாக மின்தடை நேரம் குறைக்கபட்டுள்ளது. ஆனால் மின் தடை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இதில் வாரத்திற்கு இருமுறை பராமரிப்பு என்ற பெயரில் நாள் முழுவதும் மின்தடை செய்கின்றனர். இரவில் ஏற்படும் மின்தடையால் திருட்டு அதிகரித்துள்ளது.கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை துண்டிக்கபட்டது. நேற்று முன்தினம் மதியம் 2 மணியிலிருந்து இரவு 11.30 வரை கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் மற்றும் ஊரக பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதுதவிர ராமநாதபுரம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில், அறிவிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்தும், கண்ட நேரங்களிலும் மின் தடை செய்யப்படுகிறது.

கிராம பகுதிகளில் எப்போது வரும், எப்போது போகும் என்பது தெரியாத நிலையில் தான் மின் வினியோகம் உள்ளது. சில நாட்களில் குறைந்து ஆறு முறைக்கும் அதிகமாக மின்சாரம் தடைப்படுவதால் மக்களின் அவதி அதிகரித்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us