Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்கு

ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்கு

ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்கு

ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்கு

ADDED : ஜூலை 13, 2011 03:27 AM


Google News
பெருந்துறை: ரேஷன் அரிசி பதுக்கிய தாய், மகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.பெருந்துறை, பணிக்கம்பாளையம் மாகாளி கோவில் பின்புறத்தில் குடியிருப்பவர் பழனிசாமி.

இவரது மனைவி துளசிமணி (50), மகள் தேவி (30) ஆகியோர், ரேஷன் கார்டுதாரர்களிடம், அரிசி மற்றும் மண்ணெண்ணெய் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.பெருந்துறை தாசில்தார் அருணாசலம், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீஸார், பழனிசாமி வீட்டை சோதனை செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ ரேஷன் அரிசி, 47 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். துளசிமணி, தேவி ஆகியோரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us