ADDED : ஜூலை 19, 2011 09:50 PM
திருப்பூர் : அனைத்து கட்சிகள் சார்பில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்துக்கு 'டீமா' சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் கள்(டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் அறிக்கை:சாய, சலவை ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு பிரச்னை யில், பின்னலாடை தொழிலை காப்பாற்ற வலியுறுத்தி 22ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது; அனைத்து கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நடக்கும் போராட்டத்துக்கு 'டீமா' சங்கம் ஆதரவு அளிக்கிறது.சாய ஆலைகளை மூடி ஆறு மாதங்களாகியும், இப்பிரச்னை தீர்க்கப்படாமல் இழுபறியாக உள்ளது; தமிழக முதல்வர் நேரடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, பனியன் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி நடக்கும் போராட்டத்துக்கு முழு ஆதரவு டீமா அளிக்கிறது.


