சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை: சந்தோஷ் ஹெக்டே
சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை: சந்தோஷ் ஹெக்டே
சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை: சந்தோஷ் ஹெக்டே
பெங்களூரு : சுரங்க முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை உள்ளதாக கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதி என் சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடந்த சுரங்க முறைகேட்டில் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளதாக லோக் ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமலு ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை அடுத்து பா.ஜ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதனிடையே மொரீஷியஸ் சென்றுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சுரங்க முறைகேட்டில் தொடர்பில்லை. விசாரணையை எதிர்கொள்வேன். முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய செய்தி நிறுவனத்திற்கு கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதி என் சந்தோஷ் ஹெக்டே பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், எனது அறிக்கை மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காது. எனது ஒரே நம்பிக்கை சுப்ரீம் கோர்ட் மீது தான் என கூறியுள்ளார். மேலும் அவர் எனது அறிக்கையை ஏற்றுக்கொள்வது குறித்து அரசின் கடமையல்ல. பெல்லாரியில் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு ஆதாரம் உள்ளது. இந்த ஆதாரங்கள் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டிலும் சமர்ப்பிக்க உள்ளதாக கூறினார்.


