புதிய சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்
புதிய சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்
புதிய சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்
ADDED : ஜூலை 23, 2011 10:05 PM
புதுடில்லி : மத்திய அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக சீனியர் வழக்கறிஞர் ரோகின்டன் நாரிமன், 55, நியமிக்கப்படுகிறார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்பிரமணியன், ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய சொலிசிட்டர் ஜெனரலாக ரோகின்டன் நாரிமன் நியமிக்கப்பட உள்ளார். அவரது நியமனம் தொடர்பான முறையான அறிவிப்பு, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்த பின், அடுத்த வாரம் வெளியிடப்படும்.
ரோகின்டன் நாரிமன், பிரபல சட்ட நிபுணர் பாலி எஸ்.நாரிமனின் மகன். '2ஜி' ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராக, இரண்டு வாரங்களுக்கு முன், இவர் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் அரசியல் ரீதியான பல வழக்குகளிலும், கம்பெனிகள் தொடர்பான வழக்குகளிலும், இவர் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1993ம் ஆண்டில், தன் 37வது வயதிலேயே, சீனியர் வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றவர். டில்லி பல்கலையில் சட்டப்படிப்பை முடித்த இவர், பின், ஹார்வர்டு பல்கலையிலும் படித்தார்.


