/உள்ளூர் செய்திகள்/தேனி/சுத்திகரிக்கப்படாத குடிநீர் தொற்றுநோய் அபாயம்சுத்திகரிக்கப்படாத குடிநீர் தொற்றுநோய் அபாயம்
சுத்திகரிக்கப்படாத குடிநீர் தொற்றுநோய் அபாயம்
சுத்திகரிக்கப்படாத குடிநீர் தொற்றுநோய் அபாயம்
சுத்திகரிக்கப்படாத குடிநீர் தொற்றுநோய் அபாயம்
ADDED : ஜூலை 23, 2011 10:34 PM
தேவாரம் : உத்தமபாளையம் கூட்டு குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் வழங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
உத்தமபாளையம், ஞானம்மன் கோயிலருகே உள்ள உறை கிணற்றிலிருந்து, பம்பிங் செய்யப்படும் நீர் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு கூட்டு குடிநீராக வழங்கப்படுகிறது. இதற்காக மூன்று பேரூராட்சிகளிலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைகின்றனர். மேல்நிலை தொட்டிகள் உரிய பராமரிப்பின்றி உள்ளன. சுத்தப்படுத்தி பல மாதங்களாகி விட்டன. குளோரினேசன் செய்யாமல் பம்பிங் செய்யப்பட்ட நீர் அப்படியே வழங்கப்படுகிறது. ஆற்றில் புதிய நீர் வரத்திருப்பதால் தண்ணீர் கலங்கலாக வருகிறது. ஆற்றுநீரை அப்படியே குடிப்பதால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை உரிய முறையில் பராமரித்து, குளோரினேசன் செய்யபேரூராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


