பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
ADDED : ஜூலை 23, 2011 10:36 PM
போடி : போடி நகராட்சி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எஸ்.எஸ்.புரம், பேராசிரியர் காலனி, தென்றல் நகர் ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுப்புற சுவர் வசதி இல்லை.
பராமரிப்பு இல்லாததால் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. விளையாட்டுப்பொருட்கள் வைக்கப்படும் பாதுகாப்பறைகளும் சேதமடைந்துள்ளது. விளையாட்டு மைதானங்களை பராமரிக்கவும், விளையாட்டு சாதனங்களை வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.


