Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போர்வெல் நீரை குடிக்க வைப்பதா? காட்டம்பட்டி மக்கள் "காட்டம்'

போர்வெல் நீரை குடிக்க வைப்பதா? காட்டம்பட்டி மக்கள் "காட்டம்'

போர்வெல் நீரை குடிக்க வைப்பதா? காட்டம்பட்டி மக்கள் "காட்டம்'

போர்வெல் நீரை குடிக்க வைப்பதா? காட்டம்பட்டி மக்கள் "காட்டம்'

ADDED : ஜூலை 25, 2011 09:37 PM


Google News

அன்னூர் : 'பவானி ஆற்று நீர் கிடைக்காததால் போர்வெல் நீரை குடிக்கிறோம்' என, கிராம சபா கூட்டத்தில் மக்கள் புகார் தெரிவித்தனர்.

அன்னூர் ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. காட்டம்பட்டி ஊராட்சி கிராம சபா கூட்டம், முதலிபாளையம் அரசு பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜம்பு தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., (ஆதி திராவிடர் நலன்) பாலுசாமி முன்னிலை வகித்தார். அன்னூர் ஒன்றிய பி.டி.ஓ., பூபதி பேசுகையில்,''நம் ஒன்றியத்தில் முழு சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எந்த வீட்டிலும் கழிப்பிடம் இல்லாமல் இருக்கக்கூடாது. கழிப்பிடம் அமைக்க 2,200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் அமைத்து தருகின்றன. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோய் பரவுகிறது,'' என்றார். கூட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கு 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தலா 75 ஆயிரம் மதிப்பில் 14 தெரு விளக்குகள் அமைத்தல், பொது நிதியில் 10 தெரு விளக்குகள் அமைத்தல், மூன்று இடங்களில் 700 மீட்டர் நீளத்திற்கு ரோடு போடுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 18 லட்சம் மதிப்பீட்டில் ஐந்து இடங்களில் ரோடு பராமரிப்பு செய்ய பணிகள் தேர்வு செய்யப்பட்டன. பொதுமக்கள் பேசுகையில், ''காட்டம்பட்டி ஊராட்சிக்கு திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டத்தில் பவானி ஆற்று குடிநீர் மிகவும் குறைவாக வருகிறது. ஆற்றுநீர் கிடைக்காமல் போர்வெல் நீரை குடிக்கிறோம். காட்டம்பட்டி ஊராட்சியை அத்திக்கடவு இரண்டாம் குடிநீர் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இப்பகுதியில் மேல் நிலைப்பள்ளி இல்லாததால் 12 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. காட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரமுயர்த்த வேண்டும்,'' என்றனர். கூட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us