/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தடப்பள்ளி, அரக்கன்கோட்டையில் நீர் திறப்பு 150 கன அடியாக குறைப்புதடப்பள்ளி, அரக்கன்கோட்டையில் நீர் திறப்பு 150 கன அடியாக குறைப்பு
தடப்பள்ளி, அரக்கன்கோட்டையில் நீர் திறப்பு 150 கன அடியாக குறைப்பு
தடப்பள்ளி, அரக்கன்கோட்டையில் நீர் திறப்பு 150 கன அடியாக குறைப்பு
தடப்பள்ளி, அரக்கன்கோட்டையில் நீர் திறப்பு 150 கன அடியாக குறைப்பு
ADDED : ஜூலை 26, 2011 01:38 AM
கோபிசெட்டிபாளையம்: தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைவால் 150 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனம் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. முதல்போக சாகுபடிக்காக ஏப்ரல் 16ம் தேதி திறக்கப்பட்டு, பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடியும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 150 கன அடி தண்ணீர் விடப்பட்டது. உழவு பணி மும்முரமாக நடக்கிறது. கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் விடப்பட்டதால், தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. கூகலூர் கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், தடப்பள்ளி வாய்க்காலில் 550 கன அடியும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 400 கன அடியும் திறக்கப்படுகிறது. மே, ஜூன் மாதம் வரை இரு வாய்க்காலில் 950 கன அடி தண்ணீர் சென்றது. முதற்கட்ட நடவு பகுதியில் உள்ள நெல் வயல்களில் நெற்பயிர் நன்றாக வளர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் பால் விடத் துவங்கி உள்ளது. இதன் காரணமாக பாசனத்துக்கான தண்ணீர் தேவை சற்று குறைந்துள்ளது. தண்ணீர் திறப்பு 950 கன அடியில் இருந்து 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் ஆற்றில் 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கன அடியும், காலிங்காரயன் பாசனத்துக்கு 300 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் ஐந்து கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 81.56 அடியாக உள்ளது. அணைக்கு 2,132 கன அடி தண்ணீர் வரத்தாகிறது.


