/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் சேர அழைப்புமுன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் சேர அழைப்பு
முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் சேர அழைப்பு
முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் சேர அழைப்பு
முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் சேர அழைப்பு
திருநெல்வேலி : முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் உறுப்பினர்களாக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் முன்னார் படை வீரர்கள் அவர்களது விதவைகள் உறுப்பினராக சேர வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு சந்தா தொகை ஏதும் செலுத்தாமலே உறுப்பினராகலாம்.எனவே, முன்னாள் படை வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டத்தில் உறுப்பினராக இதுவரை சேராத நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவைகள் முன்னாள் படை வீரர்களுக்கான சுகாதார பங்களிப்பு திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயனடைய வேண்டும் என்று முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


