/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் இன்ஜி., கல்லூரி: நண்பர்கள் தின கொண்டாட்டம்சேலம் இன்ஜி., கல்லூரி: நண்பர்கள் தின கொண்டாட்டம்
சேலம் இன்ஜி., கல்லூரி: நண்பர்கள் தின கொண்டாட்டம்
சேலம் இன்ஜி., கல்லூரி: நண்பர்கள் தின கொண்டாட்டம்
சேலம் இன்ஜி., கல்லூரி: நண்பர்கள் தின கொண்டாட்டம்
ADDED : ஆக 12, 2011 01:29 AM
சேலம்: சேலம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 'செலிஃப்ரான்ஸ் 11' நண்பர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னியல் துறை மாணவர் அனீஜ் ஜார்ஜ் தாமஸ் வரவேற்றார். கல்லூரி தலைவர் லோகநாதன், செயலாளர் பாலு, பொருளாளர் ஆனந்தன், துணைத் தலைவர்கள் ஞானசேகரன், வெங்கட்பதி, துணைச் செயலாளர் திருஞானம், முதல்வர் (பொறுப்பு) சங்கரன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நண்பர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக, மாணவ, மாணவியர் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வழங்கினர். மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.


