/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்பட்டியலில் பெயர் தேவைஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்பட்டியலில் பெயர் தேவை
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்பட்டியலில் பெயர் தேவை
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்பட்டியலில் பெயர் தேவை
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்பட்டியலில் பெயர் தேவை
ADDED : செப் 09, 2011 11:27 PM
தேனி : தேனி மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: கடந்த பொதுதேர்தலில் உள்ளபடி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர் அதிகம் உள்ள வார்டுகளில் கூடுதல் ஓட்டுச்சாவடி வைக்க பரிசீலிக்கப்படும். அடையாள அட்டை இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் ஓட்டளிக்க முடியாது. ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து, ஆய்வுக்கு வரும் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி ஒன்றியங்களில் 827, பேரூராட்சிகளில் 361, நகராட்சிகளில் 297 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,' என்றார்.அ.தி.மு.க., நகர செயலாளர் முருகேசன், பாசறை மாவட்ட தலைவர் சேரலாதன், நகராட்சி கவுன்சிலர் கருப்பு, தே.மு.தி.க., மாவட்ட துணைச்செயலாளர் அன்வர்ராஜா, காங்.,நகர தலைவர் சின்ஸ்., இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் ஆஷாத், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் அலுவலக செயலாளர் சண்முகம், பா.ஜ., மாவட்ட தலைவர் லோகன்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.


