/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தங்கைக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதால் கொலை : வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் வாக்குமூலம்தங்கைக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதால் கொலை : வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் வாக்குமூலம்
தங்கைக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதால் கொலை : வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் வாக்குமூலம்
தங்கைக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதால் கொலை : வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் வாக்குமூலம்
தங்கைக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதால் கொலை : வாலிபர் கொலை வழக்கில் அண்ணன் வாக்குமூலம்
ADDED : ஜூலை 27, 2011 02:23 AM
தூத்துக்குடி : தங்கைக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதால் கொலைசெய்தோம் என்று கோரம்பள்ளம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:நேற்றுமுன்தினம் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்ற இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினார்.விசாரணையில் கொலைசெய்யப்பட்டது அத்திமரப்பட்டி அருகேயுள்ள சுந்தர்நகரைச் சேர்ந்த தவமணி மகன் ஜெயக்குமார்(24)என்பது தெரியவந்தது. கொலை தொடர்பாக பாரதிநகரைச் சேர்ந்த எட்டப்பன் மகன் ரவிசங்கர்(27)என்பவரையும், அதேபகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் பால்ராஜ் என்பவரது மகன் பொன்முத்து(33) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெயக்குமாரை கொலை செய்தது அவர்கள்தான் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ரவிசங்கர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனது தங்கைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் வந்துகொண்டிருந்தது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசில் புகார்கொடுத்தேன். போலீசார் ஜெயக்குமாரை அழைத்து அவரிடம் விசாரணை செய்து கண்டித்து அனுப்பியுள்ளனர். போலீசார் விசாரணைக்கு ரவிசங்கர் வந்து சென்றதால் அவர்தான் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார் என்பதை தெரிந்துகொண்டேன்.தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பிகொண்டிருந்தார்.சம்பவத்தன்று நானும் எனது நண்பரான பொன்முத்துவும் சேர்ந்து வேலைக்கு செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு பஸ்ஸ்டாப்பில் வேலைக்கு செல்வதற்காக நின்றுகொண்டிருந்த ஜெயக்குமாரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு கோரம்பள்ளம் குளத்திற்கு வந்து அங்கு வைத்து அவரை கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டோம்.தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் பிடித்து கைது செய்தனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்