பல்லடம் அருகே நிலம் அபகரிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
பல்லடம் அருகே நிலம் அபகரிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
பல்லடம் அருகே நிலம் அபகரிப்பு அ.தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
திருப்பூர் : நில அபகரிப்பு செய்ததாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் மீது அளித்த புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு: பல்லடத்தை அடுத்துள்ள பனிக்கம்பட்டி கிராமத்தில், பரம்பரை சொத்தாக எங்களுக்கு சொந்தமான, 6.15 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் வாரிசுதாரர்களாக நாங்கள் இருக்கிறோம். பல்லடம் ஒன்றிய அ.தி.மு.க., அவைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர் நடராஜ், அந்த நிலத்தை அபகரித்துள்ளார். அ.தி.மு.க., பிரமுகர்களான தர்மராஜ், அவரது மனைவி இந்திராணி மற்றும் கட்சி பிரமுகர்கள் விஸ்வநாதன், மகாலிங்கம் ஆகியோரது பெயர்களில் நிலத்தை கிரையம் செய்து கொடுத்துவிட்டு, அடியாட்களை வைத்து எங்களை மிரட்டி வருகிறார்.
'இச்சொத்து குறித்து போலீசில் புகார் அளித்தாலோ, பிரச்னை செய்தாலோ யாரையும் உயிரோடு விட மாட்டோம்' என மிரட்டுகிறார். இந்நிலத்துக்கு விலையாக நிர்ணயித்து கொடுக்கும் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்.
இதுகுறித்து பல்லடம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட கவுன்சிலர் நடராஜ், எங்களை பல விதங்களிலும் மிரட்டி வருகிறார்; அபகரித்த நிலத்தை மீட்டு தருவதோடு, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இப்புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.