Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அறை ஒதுக்காததால் அமைச்சர் கோபம்: நடைபாதையில் அதிகாரிகளுடன் ஆலோசனை

அறை ஒதுக்காததால் அமைச்சர் கோபம்: நடைபாதையில் அதிகாரிகளுடன் ஆலோசனை

அறை ஒதுக்காததால் அமைச்சர் கோபம்: நடைபாதையில் அதிகாரிகளுடன் ஆலோசனை

அறை ஒதுக்காததால் அமைச்சர் கோபம்: நடைபாதையில் அதிகாரிகளுடன் ஆலோசனை

ADDED : ஆக 04, 2011 01:31 AM


Google News

புதுடில்லி : பார்லிமென்ட் வளாகத்தில், ரயில் அமைச்சருக்கு அறை ஒதுக்கப்படாததால், அவர் அறைக்கு வெளியே உட்கார்ந்து, முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரயில்வே அமைச்சராக இருப்பவர் தினேஷ் திரிவேதி. பார்லிமென்ட்டில் ரயில்வே அமைச்சருக்கான அறை உள்ளது. ஆறாம் எண் கொண்ட இந்த அறையை அப்போதைய அமைச்சர்கள் லாலு பிரசாத், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, ஜாபர் ஷெரீப் என, பலரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், திடீரென இந்த அறை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு ஒதுக்கப்பட்டு

விட்டது. ரயில்வே அமைச்சருக்கான அறை என்பதால், நேற்று முன்தினம் மீண்டும் இந்த அறை, தற்போதைய அமைச்சர் தினேஷ் திரிவேதிக்கு ஒதுக்கப்பட்டது. பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட தினேஷ் திரிவேதி, தன்னுடைய அறைக்கு வந்த போது, அங்கு அவரது பெயர் பலகை அகற்றப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் அந்த அறைக்கு அருகே உள்ள நடைபாதையில் நாற்காலிகளை போட்டு, முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மற்றும் ரயில்வே வாரிய தலைவர் வினய் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்றொரு அமைச்சரான சுதிப் பண்டோபாத்யாய், தினேஷ் திரிவேதி அறை இல்லாமல் வெளியே உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதை பிரதமரிடம் தெரிவித்தார்.

இதனால், பதட்டமடைந்த பிரதமர் மன்மோகன்சிங், பார்லிமென்ட் விவகார அமைச்சர் பவன்குமார் பன்சாலை அழைத்து, இந்த பிரச்னையை தீர்க்கும் படி கூறினார். பன்சால் சம்பவ இடத்துக்கு வந்து தினேஷ் திரிவேதிக்கு, மீண்டும் அந்த அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இது குறித்து தினேஷ் திரிவேதி குறிப்பிடுகையில், 'அறை கிடைக்காததால் நான் போராட்டம் ஏதும் நடத்தவில்லை.

அந்த அறை மீது எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் ஏதும் இல்லை. இருப்பினும் எம்.பி.,க்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஒரு அறை, ரயில்வே அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காணப்பட்ட என்னுடைய பெயர் பலகை, திடீரென அகற்றப்பட்டுள்ளது. என்னுடைய பெயர் பலகை இல்லாத அறைக்குள் நான் எப்படி செல்வது. அதனால், தான் வெளியே உட்கார்ந்திருந்தேன். ரயில்வே துறையில், 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த பெரிய துறை தொடர்பான அமைச்சர் பதவி வகிக்கும் எனக்கு, தனி அறை ஒதுக்காதது அவமானமாக உள்ளது' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us