/உள்ளூர் செய்திகள்/மதுரை/கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: "இஸ்கப்' தகவல்கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: "இஸ்கப்' தகவல்
கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: "இஸ்கப்' தகவல்
கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: "இஸ்கப்' தகவல்
கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: "இஸ்கப்' தகவல்
ADDED : செப் 27, 2011 10:50 PM
மதுரை : 'கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது. சுற்றுச்சூழலுக்கு
கேடு விளைவிக்காதது,' என, இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (இஸ்கப்)
கருத்து தெரிவித்துள்ளது.மதுரையில் 'இஸ்கப்' துணை செயலாளர் காளிதாஸ்,
மாவட்ட குழு தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறியதாவது: காற்றாலை, சூரியஒளி,
நீர், அனல், அணு ஆகியவை மூலம் மின் உற்பத்தி நடக்கிறது. காற்றாலை மூலம்
1,000 மெகாவாட் மின் உற்பத்திக்கு 4,000
காற்றாலைகள் தேவை. காற்றாலை ஒன்றை நிறுவ 400 சதுர அடி நிலப்பரப்பு
வேண்டும். இதற்கான நிலம் இல்லை. காற்றாலை மின் உற்பத்தியால் விவசாயம்
பாதிக்கும். சூரியஒளி மின் உற்பத்தி செலவு அதிகம். பகலில் எட்டு மணி நேரம்
மட்டுமே மின் உற்பத்தி கிடைக்கும். அணைகளில் தண்ணீர் நிரம்பினால் மட்டுமே
நீர் மின் உற்பத்தி சாத்தியம். மழை பொய்த்தால் உற்பத்திக்கு இல்லை. அனல்
மின் உற்பத்திக்கு நிலக்கரி தேவை. கார்பன்டை ஆக்சைடு வெளியேறுவதால் ஓசோன்
படலம் பாதித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. ஆண்டுக்கு 30 லட்சம்
டன் கழிவுகள் சேரும். இதை அகற்ற முடியவில்லை. அணு மின் உற்பத்தி
பாதுகாப்பானது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. உற்பத்திக்கு
தேவையான எரிபொருள், ஆண்டுக்கு 25 டன் யுரேனியம் போதும். கதிரியக்கமுள்ள 1
டன் அளவிலான கழிவை மறு சுத்திகரிப்பின் மூலம் அதிக பாதுகாப்பாக
திடப்படுத்தி, பூமிக்கு அடியில் 750 அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது.
இந்தியாவில் 14 அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தி 2,503 மெகாவாட்.
கூடங்குளம் அணு மின் நிலையம் உற்பத்தியை துவக்கினால் 2,000 மெகாவாட்
மின்சாரம் கிடைக்கும். தமிழகத்திற்கு 924 மெகாவாட் கிடைக்கும். இதனால்,
மின் தடை நீங்கும். உற்பத்தி, விவசாயம் செழிக்கும் என்றனர்.நிர்வாகிகள்
பாஸ்கரன், ராஜலட்சுமி, சரவணன், ஜெயராமன், கந்தசாமி உடனிருந்தனர்.


