சேலம்: சேலம், வேத விகாஸ் பள்ளியில், ப்ளஸ்1 படித்த மாணவன் மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம், அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஹரிகிருஷ்ணன்.
சேலம், வேதவிகாஸ் மேல் நிலைப்பள்ளியில், ப்ளஸ்1 படித்து வந்த ஹரிகிருஷ்ணனுக்கு, கடந்த 10ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஃபோன் வந்துள்ளது.மொபைல் ஃபோனை வீட்டின் வெளியே எடுத்துச் சென்று பேசிய மாணவன், உடைகளை மாற்றிக் கொண்டு, நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக, பெற்றோரிடம் கூறிச் சென்றான். நேற்று வரை வீடு திரும்பாததால், வெங்கடேஷ், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.புகார் குறித்து இன்ஸ்பக்டர் சங்கர் தலைமையிலான போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


