Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/என்கவுன்டர் பட்டியல் ரவுடி துப்பாக்கி முனையில் கைது

என்கவுன்டர் பட்டியல் ரவுடி துப்பாக்கி முனையில் கைது

என்கவுன்டர் பட்டியல் ரவுடி துப்பாக்கி முனையில் கைது

என்கவுன்டர் பட்டியல் ரவுடி துப்பாக்கி முனையில் கைது

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

சென்னை : போலீசின்,' ஹிட் லிஸ்டி'ல் உள்ள 16 கொலை வழக்குகள், எட்டு ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட்களுக்கு சொந்தக்காரரான ரவுடி பட்டரை சுரேசை, அடையாறு போலீசார் கைது செய்தனர்.சென்னையில் நடக்கும் செயின்பறிப்பு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, அந்தந்த பகுதிகளில், 'பீட் ஆபீசர்ஸ்' திட்டத்தை சென்னை மாநகர கமிஷனர் திரிபாதி அறிமுகப்படுத்தியுள்ளார்.இத்திட்டத்தின் படி, 24 மணிநேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

தொடர்ந்து தற்போது, செயின்பறிப்பு உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதுடன், அதில் தொடர்புடையவர்களும் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதே போல், அடையாறு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த, திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடியை கைது செய்தனர். இந்திரா நகர் ரயில் நிலையம் அருகில், நண்பரை பார்க்க நின்றிருந்த துரை என்பவரை, டூவீலரில் அவ்வழியே வந்த மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டினார்.



பின், துரையிடமிருந்து மொபைல் போனை பறித்துக் கொண்டார்.அப்பகுதியில் அடையாறு இன்ஸ்பெக்டர் கவிக்குமார் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும், சுரேஷ் தப்பி ஒட முயன்றான். அடையாறு பாலத்தில் போலீசார் அவனை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், பட்டரை சுரேஷ், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்பது தெரிய வந்தது.சுரேஷ் மீது, திருச்சி கோட்டை, திருவெறும்பூர், அரியலூர் மாவட்டம் திரு மானூர், புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், கீரனூர், தஞ்சை பூதலூர் போலீஸ் நிலையங்களில் 16 கொலை வழக்குகள், எட்டு ஜாமினில் வெளிவரமுடியாத வாரன்ட்கள் நிலுவையில் உள்ளன. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில், சுரேஷ் தலைமறைவாக இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிந்தது.மேலும், பட்டரை சுரேஷ், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட, தஞ்சை டெல்டா பகுதி பிரபல ரவுடி முட்டை ரவி, புல்லட் மனோகரன், பாம் பாலாஜி, மணல் மேடு சங்கர் உள்ளிட்டவர்களின் கூட்டாளி என்பதும் தற்போது போலீசின் ஹிட் லிஸ்டில் உள்ள மண்ணச்சநல்லூர் குணா, வட்டி பிரபு, சாராய பாண்டி ஆகியோருடன் பட்டரை சுரேஷின் பெயரும் உள் ளது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப்பின், சுரேஷை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us