Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

ADDED : ஆக 26, 2011 12:14 AM


Google News

கடலூர் : கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியின் சார்பில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.

ஆண்டுதோறும் பள்ளி அளவில் மாவட்ட, குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். கடலூர் குறு வட்டத்திற்கான விளையாட்டு போட்டிகள் தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 22ம் தேதி துவங்கியது. இதில் கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று கடலூர் அண்ணாவிளையாட்டு அரங்கில் நடந்த போட்டிகளில் பெண்கள் பங்கேற்ற பீச் வாலிபால், கேரம், எறிபந்து, செஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன. இதில் 50 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். மேலும் இந்த போட்டிகள் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தூக்கணாம்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா, உடற்பயிற்சி ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். விரட்டியடிப்பு: மாணவிகள் விளையாடுவதை சிலர் மைதானத்தின் மதில்சுவர் ஏறி மொபைல் போன் மூலம் படம் எடுத்தனர். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் மைதானத்தில் குவிந்திருந்த மாணவர்களை விரட்டியடித்தனர். சந்தேகப்பட்ட மாணவர்களின் மொபைல்களை வாங்கி பரிசோதித்து எச்சரித்து அனுப்பினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us