ADDED : செப் 04, 2011 02:25 AM
விழுப்புரம்:விக்கிரவாண்டி அடுத்த வி.மாத்தூர் கிராமம் நாகப்பன் மகள்
சந்தியா, 21.இவர் அதே பகுதி பெருமாள் மகன் சக்தி, 23 என்பவரை காதலித்து
திருமணம் செய்து கொண்டார்.இதனால் ஆத்திரத்தில் இருந்த சக்தியின் தாய்
சுந்தரி, சகோதரி பரமேஸ்வரி, தம்பி கண்ணன் சேர்ந்து கடந்த 29ம் தேதி
சந்தியாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி
தீ வைத்து கொளுத்தினர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
சந்தியா 2ம் தேதி இறந்தார். நேற்று சந்தியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த
வந்தவர்கள் கொலையாளிகளை கைது செய்ய கோரி தகராறுசெய்தனர். இன்ஸ்பெக்டர்
ஸ்ரீதரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமையா, தனிப்பிரிவு ஏட்டு குணசேகர் சம்பவ
இடத்திற்கு சென்று சமாதானம் செய்து தலைமறைவாக இருந்த சுந்தரியை கைது
செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


