/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பாலிஷ் ஆசையினால் பறிபோனது 7 பவுன்: வடமாநில வாலிபர் லபக்பாலிஷ் ஆசையினால் பறிபோனது 7 பவுன்: வடமாநில வாலிபர் லபக்
பாலிஷ் ஆசையினால் பறிபோனது 7 பவுன்: வடமாநில வாலிபர் லபக்
பாலிஷ் ஆசையினால் பறிபோனது 7 பவுன்: வடமாநில வாலிபர் லபக்
பாலிஷ் ஆசையினால் பறிபோனது 7 பவுன்: வடமாநில வாலிபர் லபக்
ADDED : செப் 24, 2011 11:48 PM
திருச்சி: பாலிஷ் போட்டு தருவதாகக் கூறி, பெண்ணிடம் ஏழு பவுன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற வடமாநில வாலிபர்கள் இருவரை போலீஸார் தேடுகின்றனர்.
திருச்சி பாலக்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின். நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, இரண்டு வடமாநில வாலிபர்கள் வீட்டு வாசலில் நின்று, நகைகளை குறைந்த விலையில் பாலிஷ் செய்து தருவதாக கூறினர். அதை நம்பிய ஜாக்குலின், அவர் கழுத்தில் போட்டிருந்த ஏழு பவுன் செயினை கழற்றி கொடுத்தார். செயினில் இருந்து தங்கத்தை அதிகளவு எடுத்து விடக்கூடாது என்று அருகில் நின்று கண்காணித்தார். சிறிதுநேரத்தில் பாலிஷை முடித்த வாலிபர்கள், நகையை ஜாக்குலினிடம் கொடுத்தனர். 'பளபள'வென மின்னிய நகையை பார்த்த ஜாக்குலின், அவர்கள் பாலிஷ் செய்ய கேட்ட தொகையையும் கொடுத்தார். அவர்கள் சென்றபிறகு ஜாக்குலின் நகையை பரிசோதித்தபோது, அது தனது நகையை போலவே இருக்கும் கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜாக்குலின், பாலக்கரை போலீஸில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, வடமாநில வாலிபர்களை தேடுகின்றனர்.


