பிரிட்டன் அரச குடும்பத்தில் விரைவில் மற்றொரு திருமணம்
பிரிட்டன் அரச குடும்பத்தில் விரைவில் மற்றொரு திருமணம்
பிரிட்டன் அரச குடும்பத்தில் விரைவில் மற்றொரு திருமணம்
லண்டன் : இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் ஜோடியின் ஆடம்பரத் திருமணத்தை தொடர்ந்து, பிரிட்டன் அரச குடும்பத்தில் மற்றொரு திருமணம் நடக்கிறது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதியின் மூத்த மகனான வில்லியம் உலகே வியக்கும் வகையில், தன் நீண்டகால காதலியான கதே மிடில்டனை ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இன்னொரு திருமணம் நடக்கிறது.
தற்போதைய பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மகள், இளவரசி ஆன். இவரது மூத்த மகள் சாரா பிலிப்ஸ், 30. விளையாட்டு வீராங்கனையான இவரும், பிரிட்டன் ரக்பி அணி வீரர் மைக் டின்டால் என்பவரும் நீண்ட காலமாக, காதலித்து வந்தனர். கடந்த 2003ம் ஆண்டில், ரக்பி உலகக் கோப்பையை பிரிட்டன் வென்றபோது, அணியின் கேப்டனாக விளையாடியவர் டின்டால். சாராவும், டின்டாலும் ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் முதன் முதலாக, சந்தித்துக் கொண்டனர். நீண்ட கால காதலுக்குப் பின், வரும் சனிக்கிழமை இந்த ஜோடி திருமணம் செய்துக் கொள்கிறது.
ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ராயல் மைல் சர்ச்சில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஸ்காட்லாந்து பார்லிமென்ட் அருகேயுள்ள இந்த சர்ச் 321 ஆண்டுகள் பழமையானது. அதன்பின், ராணி எலிசபெத்துக்கு சொந்தமான ஹோலிரூட் அரண்மனையில் இவர்களின் திருமண வரவேற்பு நடக்கிறது. சாரா, டின்டால் திருமணத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பங்கேற்கின்றனர். சாராவுக்கென அரச குடும்பப் பட்டம் எதுவும் இல்லாததால், திருமணத்தின்போது அவருக்கு அரச மரியாதை எதுவும் வழங்கப்படாது என்பது, குறிப்பிடத்தக்கது.


