/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேளாண் அறிவியல் கல்லூரி மாணவியர் விவசாய தொழில்நுட்பம் அறிய வருகைவேளாண் அறிவியல் கல்லூரி மாணவியர் விவசாய தொழில்நுட்பம் அறிய வருகை
வேளாண் அறிவியல் கல்லூரி மாணவியர் விவசாய தொழில்நுட்பம் அறிய வருகை
வேளாண் அறிவியல் கல்லூரி மாணவியர் விவசாய தொழில்நுட்பம் அறிய வருகை
வேளாண் அறிவியல் கல்லூரி மாணவியர் விவசாய தொழில்நுட்பம் அறிய வருகை
ADDED : ஆக 04, 2011 02:00 AM
மோகனூர்:அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில், கிராமங்களில் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக, மோகனூர் வந்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு உட்பட்ட திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியர், ஆண்டு தோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் தங்கி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் பயிர் வகைகள், அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து வருகின்றனர்.அதற்காக 'கிராம தங்கல்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தற்போது அக்கல்லூரியில் இறுதி ஆண்டு பிடிக்கும் மாணவியர், 10 பேர், கிராம தங்கல் திட்டத்துக்காக மோகனூர் வந்துள்ளனர்.
அவர்கள், கல்லூரி முதல்வர் ஜெயபால், திட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், குழு வழிகாட்டி பேராசிரியர் அனிதா ஆகியோரின் உத்தரவின் பேரில், மோகனூர் முன்னோடி விவசாயி அஜிதன் மேற்பார்வையில், ஒருமாத கால பயிற்சியை மேற்கொள்கின்றனர்.நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் அறிவுரையின் கீழ் செயல்பட உள்ளனர்.
ஒரு மாதம் தங்கியிருக்கும் அம்மாணவியர், மோகனூர், குமாரிபாளையம், ஒருவந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மேற்கொள்ளும் சாகுபடி முறைகளையும், மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்கின்றனர்.
மேலும், பயிர் வகைகள், பயிரிடும் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டு அறிக்கை தயார் செய்து அதை கல்லூரியில் சமர்ப்பிக்கின்றனர். அவர்கள் அனைவரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருமாதம் தங்கியிருந்து இத்தகைய பயிற்சியை மேற்கொள்கின்றனர்.


