Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் அருகே போதிய ஆசிரியர் நியமிக்ககோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் திடீர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அருகே போதிய ஆசிரியர் நியமிக்ககோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் திடீர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அருகே போதிய ஆசிரியர் நியமிக்ககோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் திடீர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அருகே போதிய ஆசிரியர் நியமிக்ககோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் திடீர் ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 04, 2011 12:20 AM


Google News

பெரம்பலூர்: கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெற்றோரும் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் குன்னம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.



இவர்களுக்கு 22 ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். ஆனால் 12 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், ஆசிரியர் பற்றாக்குறையினால் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளில் பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு வேதியியல் பாடம் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்களும், மாணவர்களும் கீழப்பெரம்பலூர் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென மாவட்ட நிர்வாகம், பள்ளி, கல்வித்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.



மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள், நேற்று முன்தினம் காலை வகுப்பை புறக்கணித்து பள்ளி வளாகத்தை இழுத்து பூட்டி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்றனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த குன்னம் தாசில்தார் மணிவண்ண மாணிக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us