Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

தேனி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

தேனி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

தேனி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ADDED : ஜூலை 15, 2011 10:09 PM


Google News

தேனி : காமராஜர் பிறந்த நாள் விழாவை, கல்வி வளர்ச்சி நாள் விழாவாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொண்டாடினர்.

*கோடாங்கிபட்டி ஸ்ரீ வி.பி.ஆர்., கல்வியியல் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.

கல்லூரி தாளாளர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக தலைவர் காந்தி, பொருளாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

* ஜெயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா உதவி ஆசிரியர் முத்துப்பழனி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் சின்னச்சாமி வரவேற்றார். ஆசிரியர்கள் தவச்செல்வி, பாரதி, மணிமேகலை, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வி, பரமேஸ்வரி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

* லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) வாசுதேவன் தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ராமதாஸ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கிடுசாமி, லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஜெயபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மாநில தலைவர் ராஜன் மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர் தனபால் நன்றி கூறினார்.



பெரியகுளம்: *பெரியகுளம் திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சீத்தாலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை முத்தமிழ்செல்வி நன்றி கூறினார்.

* பெரியகுளம் மூன்றாந்தலில் காமராஜர் படத்திற்கு காங்., நகர தலைவர் ஆறுமுகம் மாலை அணித்தார். நகர துணைத்தலைவர் சம்சுதீன், மாவட்ட பிரதிநிதி கடல் நாகையாசாமி கலந்து கொண்டனர்.

வருஷநாடு:

*மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் காளிமுத்து தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் மாரப்பன், உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புலவர் சங்கரலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

*கடமலைக்குண்டு ஹயக்கீரிவா வித்யலாயா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஜோன் தலைமை வகித்தார்.பள்ளி தாளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார்.விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

போடி: போடியில் காந்திஜி-காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. நிர்வாக இயக்குநர் காளிமுத்து, போடி நகர காங்கிரஸ் தலைவர் நவநீதன், உட்பட பலர் பங்கேற்றனர்.

* போடி ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் சிலமலையில் காமராஜர் பிறந்தநாள் விழா ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் நடந்தது. பொரு ளாளர் ஜெயராஜ், அவைத்தலைவர் சென்றாயர், உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us